2 கெட்அப்களில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ பட ப்ரோமோ வீடியோ வெளியீடு எப்போது?

வெற்றிமாறன் தனது ‘வடசென்னை’ படத்திலேயே சிம்புவை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்போது இணைய முடியவில்லை. இதனையடுத்து தற்போது முதன்முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற வடசென்னை உலகில் நடப்பதைப் போன்று ‘அரசன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன்.

இந்த படத்துக்காக தனது நீண்ட தலைமுடியை எல்லாம் வெட்டி தற்போது புதிய லுக்கிற்கு மாறியுள்ளார் சிம்பு. அவர் இப்படத்தில் யங்காகவும், நடுத்தர வயது கொண்டவராகவும் என இரண்டு விதமான ரோலில் நடிக்கவிருக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 16-ந்தேதி மாலை 6.02 மணிக்கு ‘அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ ரிலீசாக இருக்கிறது. இந்த ப்ரொமோ 5 நிமிடங்களுக்கு மேலான நீளம் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் படத்தின் முக்கியமான காட்சியை அறிவிப்பு வீடியோவாக படக்குழு வெளியிட போவதாகவும் கூறப்படுகிறது. இதில் சிம்புவின் இரண்டு விதமான தோற்றங்களில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்துடைய முன்னோட்ட வீடியோவை திரையரங்குகளிலும், வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் சமந்தா அல்லது சாய்பல்லவி இருவரில் ஒருவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படத்தில் முக்கியமான ரோலில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நடித்துள்ள காரணத்தால், அவரே அரசனிலும் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

simbu and vetrimaaran arasan movie promo duration details
actor simbuarasan moviedirector vetrimaaranகலைப்புலி எஸ். தாணுசிம்பு