துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

துருவ் விக்ரமின் அடுத்த படமாக புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம் உருவாகிறது. தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணி முதல் முறையாக இணைகிறது.

பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான ஆக்‌ஷன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி படத்தின் தலைப்பு, முழுமையான நடிகர்கள் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து பிரம்மாண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு, துருவ் விக்ரமின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள அறிவிப்புகளால் மேலும் அதிகரித்துள்ளது.

Dhruv VikramRamesh VarmaShooting Update on Dhruv Vikram – Ramesh Varma’s Upcoming Film