தாத்தாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜுன்!

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது புதிய அலுவலகமான ‘ICONZA’-வை திறந்துள்ளார்.

எளிமையான முறையில் நடைபெற்ற தொடக்க விழா மற்றும் பூஜையில் அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். விழாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் அழியாத கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா, 50 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளில் ‘ICONZA’ என்ற புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள அல்லு அர்ஜுன், சினிமா, படைப்பாற்றல் மற்றும் கலைநோக்கில் தனது குடும்பத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

கிரியேட்டிவிட்டி, கூட்டுப் பணிகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கான தளமாக உருவாக்கப்பட்டுள்ள ‘ICONZA’, நடிப்பைத் தாண்டி அல்லு அர்ஜுனின் விரிவடைந்து வரும் கலைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

தற்போது அட்லி இயக்கும் ‘ராக்கா’ திரைப்படத்திற்காக தயாராகி வரும் அல்லு அர்ஜுன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘AA23’ திரைப்படத்திலும், அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா 3: தி ரேம்பேஜ்’ படத்திலும் நடிக்க உள்ளார்.

Allu ArjunAllu Arjun Launches ICONZA Office on Grandfather Allu Ramalingaiah’s Birth AnniversaryAllu Ramalingaia