‘டோரதி’யை கொண்டாடும் ரசிகர்கள்.. கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்த வெற்றி!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படமான ‘டோரதி’, வித்தியாசமான கதைக்களம், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசையால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகள் போன்ற அம்சங்களை மனிதநேயத்துடன் அணுகும் ‘டோரதி’, வழக்கமான கமர்ஷியல் அம்சங்களைத் திணிக்காமல் வலுவான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்களால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவை ரசிகர்கள் ‘டோரதி’ படத்தை கொண்டாடி வருவதாக முன்னணி திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நல்ல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதைப் பார்ப்பது திரையரங்க உரிமையாளராக மகிழ்ச்சியளிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் தனது 10-வது திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கோவை ரசிகர்கள் ‘டோரதி’ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்” என்றார்.

- Advertisement -

உணர்வுப்பூர்வமான, வழக்கத்திற்கு மாறான கதையை நேர்மையாக சொல்ல வேண்டும் என்ற கார்த்திக் சுப்புராஜின் அணுகுமுறைக்கு இப்படத்தின் வரவேற்பு சான்றாக அமைந்துள்ளது. ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரின் கெமிஸ்ட்ரியும், மிகையில்லாத இயல்பான நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. இளையராஜாவின் ஆத்மார்த்தமான இசையும் படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் தங்களது பாராட்டுகளுடன் மற்றவர்களுக்கும் பரிந்துரைத்து வருவதால், வாய்மொழி பாராட்டுகள் திரையரங்க வருகையாக மாறி வருகிறது. குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு பார்வையாளர்களும் ‘டோரதி’யை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தாண்டி, வலிமையான கதை, இயல்பான நடிப்பு மற்றும் பார்வையாளர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும் திரைக்கதை ஆகியவையும் ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை ‘டோரதி’ மீண்டும் நிரூபித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வரும் ‘டோரதி’, வெற்றிப்படமாக மட்டுமின்றி, பல்வேறு கேள்விகள் மற்றும் சமூக உரையாடல்களை உருவாக்கிய படமாகவும் மாறியுள்ளது.

DorothyFans Celebrate Dorothy.. A Major Success for Karthik SubbarajKarthik Subbaraj