‘டோரதி’யை கொண்டாடும் ரசிகர்கள்.. கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்த வெற்றி!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படமான ‘டோரதி’, வித்தியாசமான கதைக்களம், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசையால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகள் போன்ற அம்சங்களை மனிதநேயத்துடன் அணுகும் ‘டோரதி’, வழக்கமான கமர்ஷியல் அம்சங்களைத் திணிக்காமல் வலுவான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்களால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையும் […]