புஷ்பா-2 படத்தின் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:
‘புஷ்பா’ பட முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரிலீஸாகி, தற்போது பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம், உலகளவில் ரூபாய் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக, இந்திய சினிமாவில் முதல் இரண்டு நாளில் அதிகம் வசூலித்த படமாக ‘புஷ்பா 2’ புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் வேட்டை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘புஷ்பா 2’ முதல் காட்சியை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் பார்க்கச் சென்ற ரேவதி என்ற நடிகை, கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து, உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.
rs 25 lakh comnsation announced for deceased fan actor allu arjun condoles