மே மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ வெப் சீரிஸ்!

‘உப்பு புளி காரம்’ ஹிட் டீமின் அடுத்த முயற்சி… ஜியோஹாட்ஸ்டாரில் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ புதிய குடும்ப தொடர் அறிவிப்பு

ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் மே மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘உப்பு புளி காரம்’ போன்ற வெற்றித் தொடரை வழங்கிய அதே தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக உருவாகும் இந்த தொடர், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட புதிய கதையுடன் வருகிறது.

நவீன குடும்ப வாழ்க்கையின் உண்மை தருணங்களை பிரதிபலிக்கும் வகையில், நான்கு உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த கதை நகர்கிறது. ஒவ்வொருவரின் தனித்தனி குணநலன், தொழில், வாழ்க்கைத் தேர்வுகள் ஆகியவற்றை சமாளிக்கும் விதத்தையும், அவர்களை ஒன்றிணைக்கும் குடும்ப பிணைப்பையும் இந்த தொடர் உணர்வுப்பூர்வமாகவும் நகைச்சுவையுடனும் வெளிப்படுத்துகிறது.

இந்த தொடரில் போஸ் வெங்கட் குடும்பத் தலைவராகவும், காயத்ரி சாஸ்த்ரி அமைதியான இல்லத்தரசியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மொத்தம் 100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப் சீரிஸை, ‘உப்பு புளி காரம்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். குடும்பம், நகைச்சுவை, உணர்ச்சி ஆகிய அனைத்தையும் இணைக்கும் இந்த தொடர், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் புதிய எபிசோடுகளுடன் வெளியாகவுள்ள ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’, குடும்ப மதிப்புகளையும் சமகால வாழ்க்கை சிக்கல்களையும் ஒருங்கிணைக்கும் விறுவிறுப்பான கதையைக் கொண்டு ரசிகர்களை கவர இருக்கிறது.

இந்த வருடம் மே மாதம் முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடர், அந்த தளத்தின் அசல் உள்ளடக்கங்களில் மற்றுமொரு முக்கிய சேர்க்கையாக இருக்கும்.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி: ஜியோஹாட்ஸ்டார், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைப்பின் மூலம் உருவான இந்த தளம், தரமான மற்றும் புதுமையான உள்ளடக்கங்களின் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கி வருகிறது.

Bose VenkatBrothers and SistersGayathriKishoreLuthufNikhila ShankarPramodiniRaj AyyappaShravnithaபிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்