பிரபல கேமராமேன் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு!

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கத்தில், டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்கும் “ரஞ்சன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே. சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்காவும் இத்திரைப்படத்தின் மூலம் இளம் ஜோடியாக அறிமுகமாகிறார்கள்.

இளைஞர்களிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகும் இந்தப் படத்தில், முக்கியமான நீதிமன்ற காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அந்த நேரத்தில் படத்தின் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான ரவியாதவின் பிறந்தநாள் கொண்டாட்டம் படக்குழுவினரால் சர்ப்ரைஸாக ஏற்பாடு செய்யப்பட்டது.

திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு பிரம்மாண்டமான கேக் கொண்டு வரப்பட்டு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னிலையில் ரவியாதவ் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்வு படப்பிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கியது.

சமூகத்திற்கு முக்கியமான கருத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி வரும் “ரஞ்சன்” திரைப்படம், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

PrashanthRanjanRavi YadavThiagarajanரஞ்சன்