‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கோவில் கட்டிய ராணுவ வீரர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, மதுரையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்..

சூப்பர் ஸ்டாரின் வசனங்கள், பாடல்கள், மேலும் பாடலில் உள்ள வரிகளை எல்லாம் வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாழ்ந்து வரும் ரசிகர்கள் ஏராளம்.

இணையதளத்தில் இப்போதும் ஒரு வீடியோ உலா வரும். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களில் ஒருவர், ‘வெளியே வா என் தெய்வமே.. என் சாமி..’ என உரத்த குரலில் அழைத்திடுவார்.

அவர் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல; இன்று பக்தியாய் நிகழ்ந்திருக்கிறது. ஆம், மதுரையைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கார்த்திக் என்பவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர். இவர், மதுரையில் உள்ள தனது சொந்த ஊரான திருமங்கலத்தில் “ஸ்ரீ ரஜினிகாந்த்” கோவிலை கட்டியுள்ளார்.

300 கிலோ எடையுள்ள கருங்கல்லால் செதுக்கப்பட்ட 3.5 அடி உயர ரஜினிகாந்த் சிலை அந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கார்த்திக், ரஜினிகாந்த்திற்கு கோவில் கட்டிய சம்பவம், இணையத்தில் வேகமாக பரவியது. பலரும் கார்த்திக்கிடம் பேட்டி எடுத்தார்கள். மதுரையைச் சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர்கள், மதுரை செல்லும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த கோவிலுக்கு செல்கின்றார்கள்.

இந்நிலையில், ரஜினிகாந்த் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் தனது இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களுடன் நீண்ட நேரம் பேசினார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது இல்லத்தை சுற்றிக் காட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆம், நல்வங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்.!

rajinikanth meet ex army karthik who build rajinikanth temple
rajini kanthsuper startempleமதுரைஸ்ரீ ரஜினிகாந்த்