‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு: கேரளாவில் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புக்காக நெல்சன் திலீப்குமாருடன் கேரளா மாநிலம் கொச்சிக்கு பறந்துள்ளார். விமான நிலையத்தில் தலைவர் நடந்து வந்த ஸ்டைலான வீடியோக்கள் வைரலாக, விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து, இப்போது ‘ஜெயிலர் 2’ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘ஜெயிலர்’ முதல் பாகம் 600 கோடியைத் தாண்டிய நிலையில், இரண்டாம் பாகம் கோலிவுட்டின் முதல் 1000 கோடி வசூல் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, பகத் பாசில், மோகன்லால் என பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்து கேரள மாநிலம் கொச்சிக்கு சென்ற ரஜினிக்கு ரசிகர்கள் இணையவழி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

75 வயதிலும் செம எனர்ஜியுடன் உழைக்கும் ரஜினி இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன்தான். ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினி-மோகன்லால் சந்திப்பு நிகழுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

rajinikanth in jailer2 movie update
actor mohanlaljailer2 movieRajinikanthமோகன்லால்ரஜினி