ரஜினி-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அடுத்தாண்டு ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என ரஜினி கூறியுள்ளார்.

இந்நிலையில், ரஜினி ஒரு கலகலப்பான குடும்பப் படத்தில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. தொடர்ந்து சீரியஸான ஆக்சன் படங்களிலேயே ரஜினி நடித்து வருவதால், அவரது நடிப்பில் ஜாலியான படங்களை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர். இதற்கு தீர்வாக இயக்குனரான சுந்தர்.சி அவர் தேர்வு செய்திருக்கிறார்.

இவர்கள் கூட்டணியில், முன்னதாக ‘அருணாச்சலம்’ என்ற மெகாஹிட் படம் வந்தது. அதன் பிறகு 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினி-சுந்தர்.சி கூட்டணி இணைய இருக்கின்றது. அவ்வகையில், சுந்தர்.சி ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், அக்கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துப்போக தனது 173 படத்தின் இயக்குநராக சுந்தர்.சியை ரஜினி தேர்ந்தெடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.

இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வந்தது. மேலும், சுந்தர்.சியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஏ.சி.சண்முகமும் வேல்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது வேறொரு தயாரிப்பாளர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார் என்றும் பேசப்பட்டு வருகின்றது. இதுகுறித்து சில வாரங்களில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்மூலம் ரஜினி-சுந்தர்.சி இணைவது உறுதியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

rajinikanth and sundar c movie producer details revealed
director sundar.cjailer 2 movieRajinikanthசுந்தர் சிரஜினிகாந்த்