திருமணமான சில வாரங்களிலேயே பிரியங்கா போட்ட பதிவால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி பிரபலங்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
இவரது திருமணம் முடிந்த கையோடு அமீர்,பாவனி திருமண நிகழ்ச்சியில் கணவர் வசியுடன் பங்கேற்று இருந்தார். தற்போது இவர் தொகுத்து வழங்கியிருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மகாநதி சீரியல் லட்சுமி பிரியா தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது திருமணம் முடிந்து சில வாருங்கள் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய 33வது பிறந்த நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.