‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி குறித்து, சண்முகப் பாண்டியன் அறிக்கை..

நாளை வெள்ளிக்கிழமை 8 திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..

விஜய் சேதுபதி நடித்த ஏஸ், மற்றும் நரிவேட்டை, மையல், விஜய்காந்த் மகன் நடித்த படை தலைவன் , ஸ்கூல், அகமொழி விதிகள், ஆகக் கடவன், திருப்பூர் குருவி போன்ற படங்கள் வருகின்றன.

இதில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ், டொவினோ தாமஸ் மற்றும் சேரன் நடிப்பில் நரிவேட்டை, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் மற்றும் 5 சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென விஜயகாந்த் மகன் பின்வாங்கியுள்ளார். இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படத்தில் சண்முகப் பாண்டியன் யாமினி சந்தர், கஸ்தூரிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் மே 23-ந்தேதி நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் ஹீரோ சண்முகப் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைவருக்கும் வணக்கம், படை தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில்,

திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும்; உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வகையில், நாளை 7 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

padaithalaivan movie will not release tomorrow
ACE Movieactor vijay sethupathipadaithalaivan movieசண்முகப் பாண்டியன்விஜய் சேதுபதி