பாலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் சாய் பல்லவி..

பாலிவுட் சினிமாவில் சாய் பல்லவி ‘இராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சாய் பல்லவியின் அடுத்த பட தகவல்கள் பார்ப்போம்..

மஹாநடி’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் நாக் அஸ்வின். ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் நாக் அஸ்வின்.

முழுக்க நாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனையும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

சாய் பல்லவி நடிக்கவுள்ள படத்தினை முடித்துவிட்டு, ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தின் பணிகளை நாக் அஸ்வின் தொடங்கவுள்ளார். இதில் தீபிகா படுகோன் விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்பதும் விரைவில் தெரியவரும்.  தீபிகா விலகியதற்கு காரணம் அதிக நாட்கள் மற்றும் சம்பளப் பிரச்சினை என கூறப்படுகிறது.

nag ashwin to direct actress sai pallavi

 

actress deepika padukoneactress sai pallavistoryஇயக்குநர் நாக் அஸ்வின்கல்கி 2898 ஏடி