நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட டிரைலர்!

சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, நகைச்சுவை மற்றும் இனிமையான தருணங்களை ஒன்றிணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான திரைப்பட அனுபவத்தை வழங்கும் படமாக இது உருவாகியுள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்ஷி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இந்த ஆண்டின் முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 வயதைக் கடந்தும் தனது கனவைத் துரத்தும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரான சஞ்சய் விஸ்வநாத் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் உலகத்தை டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல், நகைச்சுவை, கனிவு மற்றும் உணர்ச்சிகளை அழகாகக் கலந்து சூர்யா வெளிப்படுத்தியுள்ள நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

சூர்யாவின் திரை ஆளுமையும், வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும் இணைந்து, சமீப காலங்களில் அவரது மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இப்படம் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை, நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு மற்றும் வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி ஆகியவை டிரெய்லருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் வெளிப்படுத்திய நம்பிக்கையை டிரெய்லர் மேலும் அதிகரித்துள்ளது. உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் குடும்ப ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Actor Suriya’s Viswanath & Sons Trailer ReleasedMamitha BaijuRadhika SarathkumarRaveena Tandonsuriyavishwanath and sons