தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
moondru mudichu serial today promo update 02-09-25
நேற்றையே எபிசோடில் சுந்தரவல்லி இவ்வளவு காசு கொடுத்து கார் வாங்கி இருக்கும் எப்படி விட்டுட்டு போயிருக்கான் அவன் வரட்டும் கேட்கிறேன் என ஆக்டிங் கொடுக்க உடனே நந்தினி நம்ம உடனே போய் சூர்யா சார் சாவியை எடுத்துட்டு வந்து வச்சிடலாம் என வெளியில் வருகிறார். நந்தினி கார் சாவியை சூர்யா ரூமில் வைத்து விட்டு சென்றுவிட மாதவி ரூமில் வந்து சாவியை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். உடனே சூர்யா ரெடியாகி வந்து வேலைக்கு கிளம்ப கார் சாவியை தேட கிடைக்காமல் இருக்கிறது. கீழே வந்து நந்தினி இடம் சாவியை கேட்க, நான் தான் ரூமில் வைத்தேன் என சொல்ல அங்க ரூம்ல இல்ல நான் தேடிப் பார்த்துட்டேன்னு சொல்ல சரி நான் போய் பார்க்கிறேன் என மேலே சென்று தேட, சாவி கிடைக்காமல் இருக்க நந்தினி கீழே வந்து சாவி இல்லை என சொல்லுகிறார். நான் தான் சார் வெச்சேன் இப்போ காணோம் என்று சொல்ல என்ன கடுப்பாகாத நந்தினி உன்னை யாரு சாவியில் கை வைக்க சொன்னது என்று கோபப்படுகிறார்.
நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருக்கணும். கிளம்பும்போதே இவ்வளவு பிரச்சனையா? காரில் சாவி இருந்தா உனக்கு என்ன பிரச்சனை கோபப்பட்டு கொண்டிருக்க அருணாச்சலம் வந்து என்னாச்சு எதுக்கு திட்டிகிட்டு இருக்க என்று கேட்க கார் சாவியை தொலைச்சிட்டா என்று சொல்லுகிறார். நீ எதுக்குமா எடுத்த என்று கேட்க கார்ல சாவி இருந்தது அதுக்காக தான் எடுத்தேன் என்று சொல்ல உடனே சூர்யா எனக்கு டைம் ஆயிடுச்சு நந்தினி என் கண்ணு முன்னாடியே நிக்காத போய்டு என்று திட்டி அனுப்புகிறார். உடனே மனோகர் போன் பண்ணி கொண்டு இருக்க போர்டு மீட்டிங்க கேன்சல் பண்ணுங்க என்று சூர்யா சத்தமாக சொல்ல சுந்தரவல்லி என்ன ஆச்சு என்ன விஷயம் என்று கேட்க சாவி தொலைந்த விஷயத்தை சொல்ல, கேப் புடிச்சு போக வேண்டியது தானே என்று கேட்கிறார்.
உடனே எல்லாத்தையும் சாதித்துவிடுவேன் கிழிச்சுருவேன் பேசினா இவனை நம்பிவிட்டால் எப்படி ஆபீஸ் முன்னேற முடியும் என்று சொல்லிவிட்டு நானே போறேன் என சொல்லி சுந்தரவல்லி சென்று விடுகிறார் பிறகு நந்தினி ரூமில் வந்து மீண்டும் சாவியை தேடுகிறார். பிறகு கருப்பசாமி போட்டோ முன் நின்று நீ எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தானே இருக்க நான் என்ன பண்ண சாவி எடுத்துக்கிட்டு வந்தது என்னோட தப்பா இதுக்காக என்ன சூர்யா சார் திட்டுகிறார் என்று சொல்ல சூர்யா வந்து நிற்கிறார். உடனே சூர்யாவும் கருப்பசாமியிடம் பேசுவது போல இவளுக்கு இந்த வீட்ல சுயமரியாதையும் கௌரவமும் கிடைக்கணும்னு தான் நான் போராடிகிட்டு இருக்கேன் அதுக்காக இவ புரிஞ்சுகிட்டு இவ பொறுப்போட நடந்துக்கலாம்ல என்று கேட்கிறார். உடனே நந்தினி நான் தான் ஊருக்கு போய்டுறேன்னு சொல்ற இல்ல கருப்பா என்னை எதுக்கு இவங்க புடிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க என்று கேட்கிறார். என்ன ஊருக்கு அனுப்பி வைக்க சொல்லு கருப்பா என்று சொல்ல நீயே ஊறவைக்கேட் பண்ணிட்டு இவ கூட வந்து இங்கே இருக்க இவ ஊருக்கு போய் என்ன பண்ண போற கருப்பா என்று கேட்கிறார். ஒருத்தவங்க நம்மள அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சா அவங்கள திருப்பி அடிக்கணும் அதுதான் வீரம் அது தான் கெத்து ஓடி ஒலிவது நல்லது அல்ல அசிங்கம் என சொல்லுகிறார்.
மாதவி சாவியை எடுத்துக்கொண்டு வந்து கிச்சனில் வைத்து விட மீண்டும் இவர்கள் கருப்பன் முன் நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு இங்கிலீஷ் பேச எல்லாம் வராது எத்தனை பேருக்கு வேணாலும் நான் ஒத்தாலா நின்னு சமைப்பேன். எனக்கு ஆபீஸ் வேலை எல்லாம் வராது என்று சொல்லுகிறார். பிறகு கிச்சனுக்கு வந்த கல்யாணம் கார் சாவியை கவனித்து இது சின்னையாவோட சாவி ஆச்சு அவர்கிட்ட கொடுத்திடலாம் என்று வருகிறார். கல்யாணம் சாவியை கொடுக்க நீயே பாத்தியா கருப்பா உன்னோட பொண்ணு வேலைய கிச்சன்ல வச்சுட்டு நம்ம மேல தப்புன்ற மாதிரி உன் மேலையும், என் மேலயும் கோபப்பட்டு கிட்டு இருக்கா என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். மாதவி சுரேகா இருவரும் சூர்யா நந்தினி திட்டியதை நினைத்து சந்தோஷப்பட்டு பேசுகின்றனர். அம்மா கரெக்டான டைம்ல இந்த பிளானை போட்டாங்க என்ன இருந்தாலும் அம்மா சீனியர் தான் என சொல்லுகிறார்.
இதே மாதிரி வாரத்துக்கு ஒரு சண்டை கிளப்பிவிட்டால் போதும் என மாதவி சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி மாதவிக்கு போன் போட்டு அங்கு என்ன நடக்குது என்று கேட்க சூர்யா நந்தினி பயங்கரமா திட்டிட்டான் அவ அப்படியே கண் கலங்கி நின்னா என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் என சொல்லுகிறார். அப்புறம் என்னமா என்று சுரேகா கேட்க அதுதான் கார் சாவியை கிச்சனில் வைக்க சொன்னேன்ல என்று சொல்ல இப்போ அவங்களுக்குள்ள இன்னும் சண்டை பிடிக்கும் என சுந்தரவல்லி சொல்ல மாதவி கூடிய சீக்கிரம் பெருசா ஒன்னு செய்யணும் என்று சொல்லுகிறார். கூடிய சீக்கிரம் சூர்யாவே அவளை வீட்டை விட்டு கழுத்தை புடிச்சு வெளியே தள்ளுவான் நான் தள்ள வைப்பேன் என சுந்தரவல்லி சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்திடம் நான் என்னைக்காவது கார் சாவியை கிச்சனுக்கு எடுத்துக் கொண்டு வந்ததை நீங்க பார்த்திருக்கீங்களா என்று கேட்ட சுந்தரவல்லி இடம் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன்னு சொல்லி மாதவி சந்தோஷப்படுகிறார். மறுபக்கம் நந்தினி, சத்தியமா நான் அதை எடுக்கல தொடவே இல்லை ஐயா என்று சொல்ல சூர்யா இல்ல டாடி என்று சொல்ல,அருணாச்சலம் கோபப்படுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
moondru mudichu serial today promo update 02-09-25