சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘மோனிகா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா என்ற இப்பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் ‘மோனிகா’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக, விஜய்யின் அரபிக்குத்து, ரெட்ரோ படத்தில் கனிமா ஆகிய பாடல்களில் பூஜா ஹெக்டே தன் முழு நடன திறனையும் நிரூபித்தார். அதுபோல மோனிகா பாடலிலும் பூஜா மற்றும் சௌபின் சாஹிரின் நடனம் அனைவரையும் வியக்க வைத்தது. குறிப்பாக, சவுபின் நல்லா நடிப்பார் என தெரியும், ஆனால், நல்லா டான்ஸ் ஆடுவார் என இப்போது தான் தெரியும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பாடல் தற்போது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகின்றது. இப்பாடலில் எத்தனை இன்ஸ்டாகிராம் ரீலிஸ் வந்துள்ளது என்பதும் தற்போது கணக்கிடப்படுகிறது.
அவ்வகையில், ‘மோனிகா’ பாடல் வெளியான ஒரே நாளில் 5000 ரீலிஸ் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ‘காவாலா’ பாடலை விட அதிகம். யூடியூபில் மோனிகா பாடல் ஒரே நாளில் கிட்டத்தட்ட 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கின்றது.
ஏற்கனவே, கூலி திரைப்படத்தில் இருந்து ‘சிகிட்டு’ என்ற பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வைரலானது. அனிருத் மற்றும் டி.ராஜேந்தர் கூட்டணியில் வெளியான சிகிட்டு பாடல் மாபெரும் ஹிட்டடித்தது. அதைப்போல, தற்போது வெளியாகியிருக்கும் இந்த பாடலும் ரசிகர்களை மிகவும் வசீகரித்திருக்கிறது.