சூர்யா பிறந்தநாளில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படமான ‘கருப்பு’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் தனது 46-வது படத்தில் தற்போது இணைந்துள்ளார். இந்நிலையில், சூர்யாவின் 47-வது படத்தை பகத் பாசிலை வைத்து ‘ஆவேஷம்’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனரான ஜீத்து மாதவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லாலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மோகன்லால், சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் இணைந்து நடித்தார். தற்போது மீண்டும் ‘சூர்யா 47’ படத்தின் மூலம் இணைகிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

இப்படத்தில் சூர்யா, போலீசாக நடிப்பதாகவும், அவர் நடித்த போலீஸ் படங்களில், மிகவும் வித்தியாசமான ஒரு படமாக ‘நெகட்டிவ் ஷெட்’ கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ந்தேதி வரவுள்ளது. எனவே, அன்றைய மேலும் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய டீசரும் வெளியாக இருப்பதாக, சூர்யா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில் இரண்டு அறிவிப்பும் வெளியானால் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும். பொறுத்திருந்து பார்ப்போம்.

mohanlal again joining hands with suriya 47th film
actor mohanlalactor suriyafansஆர்.ஜே பாலாஜிசூர்யா