திரைப்பட இயக்குனர்களுக்குள் நிகழும் கருத்து மோதல்கள் புதிதல்ல. அதில், இது வேறு மாதிரி..
அதாவது, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் தயாரிப்பில், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாட்டில் ராதா’ திரைப்படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். மேலும் அவர் ஆபாச வார்த்தைகளைப் பேசப் பேச, அங்கு இருந்த திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள் என பலரும் கைதட்டிச் சிரித்து, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், சர்ச்சையாகி இருக்கிறது.
இது தொடர்பாக, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில், ‘மஞ்சள் புடவை கட்டி வாழை மீனுக்கும்…’ என்று விரச நடனமாட வைத்து, பெண்களை போகத்திற்கான பொருள் என்று காட்டும் போதெல்லாம், அவர்கள் உங்கள் மகள் போன்றவள் என்றெல்லாம் தோணாது. ஊருக்கு உபதேசம் செய்யும்முன் சுயவிமர்சனம் செய்து கொண்டு பேசுங்கள் #மிஷ்கின் அவர்களே..” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
லெனின் பாரதியின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தும், மிஷ்கினின் பேச்சுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
லெனின் பாரதியின் இந்தக் கருத்துக்கு, இயக்குநர் ஜான் மகேந்திரன் ‘சபாஷ் லெனின்..’ என கமெண்ட் செய்துள்ளார். இவர், தளபதி விஜய்யை வைத்து ‘சச்சின்’ என்ற படத்தினை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளார். வெயிட்டிங்..