வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் மண்டவெட்டி படத்தின் முதல் சிங்கிள் ராட்சசியே வெளியானது!

சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘ராட்சசியே’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி உணர்வுப்பூர்வமாக பாடியுள்ள ‘ராட்சசியே’ பாடலுக்கு தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் தமிழ்மணி வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மர்மமான ஒரு பெண்ணைச் சுற்றியுள்ள மாயத்தன்மையை இசை மூலம் வெளிப்படுத்துகிறது.

மெல்லிசையும் மர்மமும் கலந்த ‘ராட்சசியே’ பாடல், ‘மண்டவெட்டி’ படத்தின் அமானுஷ்ய உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் கதையின் மையத்தில் இடம்பெறும் மாயத்தன்மை மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்களையும் பாடல் பிரதிபலிக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் வெளியான டீசர், மர்மமான தொன்மக் கதைகள், பதற்றம் நிறைந்த சூழல் மற்றும் ‘செஞ்சி சாமி’ எனும் அமானுஷ்ய உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது வெளியாகியுள்ள ‘ராட்சசியே’ பாடல் அந்த உலகத்தை இசையின் வாயிலாக மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சுபத்ரா ராபர்ட், அம்ரிதா, தேனப்பன், கஜராஜ், பிரேம் குமார், ரிதீஸ்வர் ராஜன், ஷிஜு ராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு பிரகாஷ் மணிதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். குணா பழனிசாமி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ள நிலையில், கெளதம் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

மேலும், சங்கீதா சென் ஆடை வடிவமைப்பையும், டோனி ஜே ஒலி கலவையையும், பாலகங்காதரன் டிஐ கிரேடிங்கையும், விஜயன் விஎஃப்எக்ஸ் பணிகளையும் கவனித்துள்ளனர்.

‘மண்டவெட்டி’ படத்தின் ஆடியோ வெளியீடு, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

AmrithaGajarajKomalee PrasadMandavettiMandavetti First Single Raatchasiye Released in Vaikom Vijayalakshmi’s Voice!Prem KumarRaatchasiyeRithieshvar RajanShiju RaghavanSubatra RobertThenappan