தனது சம்பளம் பற்றிய சர்ச்சைகளுக்கு, மமிதா பைஜு விளக்கம்..

ஹெச்.வினோத் இயக்கி வரும் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்திருக்கிறார் மமிதா பைஜு. விஜய்யுடன் சேர்ந்து நடிக்க கொடுத்து வைத்திருப்பதாகவும், ‘ஜனநாயகன்’ வாய்ப்புக்காக சந்தோஷப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சூர்யா, தனுஷ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டியூட்’ படத்தில் நடிக்க மமிதா பைஜுவுக்கு ரூ.15 கோடி சம்பளம் என வலைதளங்களில் பேசப்பட்டது. முன்னணி ஹீரோயின்களான திரிஷா, நயன்தாராவுக்கே இதுவரை படம் ஒன்றுக்கு ரூ.15 கோடி சம்பளம் கிடைத்தது இல்லை. அப்படி இருக்கும்போது, மமிதாவுக்கு ரூ.15 கோடியா என பலரும் வியந்தார்கள். இந்நிலையில் இது குறித்து மமிதா பைஜு தெரிவிக்கையில்,

‘நான் ‘டியூட்’ படத்துக்காக ரூ.15 கோடி வாங்கியதாக பேசுகிறார்கள். நான் சோஷியல் மீடியாவில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை. அதனால், என் சம்பளம் குறித்து ஒருவர் லிங்க் அனுப்பியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு ரூ.15 கோடி எல்லாம் கொடுக்கவில்லை. சோஷியல் மீடியாவில் வருவதெல்லாம் உண்மையில்லை.ரூ. 15 கோடி கேட்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரா மமிதா? என்றுகூட ஒரு கமெண்ட் பார்த்தேன் .

ஒரு மலையாளியாக இருந்தாலும்கூட தமிழ் படத்தில் அதுவும் வெயிட்டான கதாபாத்திரத்தை என்னை நம்பிக் கொடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரனை மறக்கவே மாட்டேன். ‘டியூட்’ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது என தெரிவித்துள்ளார்.

mamitha baiju salary for dude movie
actor pradeep ranganathanactress mamitha baijudude movieமமிதா பைஜுவிஜய்