ஜெம் வீரமணி விவகாரத்தில் அமீர் – வெற்றிமாறன் அறிக்கை

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக இயக்குநர்கள் வெற்றி மாறன் மற்றும் அமீர் தெரிவித்துள்ளனர்.

உலகத்தைப் பற்றியே முழுமையாக அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறிவைத்து பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றிருந்தால், அது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், வீரமணியை பாதுகாக்க முயன்றதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

- Advertisement -

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தேவையான சட்ட உதவி, உளவியல் ஆதரவு மற்றும் சமூக மறுவாழ்வு வழங்கப்படுவதுடன், அவர்களின் அடையாளம் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித தளர்வுமின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வீரமணி வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வெற்றி மாறன் மற்றும் அமீர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனித நேயத்தை கேள்விக்குறியாக்கும் பாலியல் குற்றங்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக தங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

AmeerAmeer and Vetri Maaran Issue Statement on the Gem Veeramani ControversyGem VeeramaniVetri Maaran