எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று! – சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்த விக்கி கௌஷல்!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இப்படம், பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வருகிறது.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

ஒரு போஸ்டரில் சிகரெட் மற்றும் லைட்டருடன் தீவிரமான பார்வையில் காட்சியளிக்கும் விக்கி கௌஷல், மற்றொரு போஸ்டரில் நீச்சல் குளத்தில் மலர்க்கொத்துடன் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இரு போஸ்டர்களும் அவரது கதாபாத்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இந்த போஸ்டர்கள் விக்கி கௌஷல் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் விக்கி கௌஷல் முதன்முறையாக இணைந்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘Love & War’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21-ம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Love & WarSanjay Leela BhansaliVicky KaushalVicky Kaushal In His Both The Look Posters From Sanjay Leela Bhansali's Love & War