சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி ரிலீஸ் என்பது தெரிந்ததே. இந்நிலையில், லோகேஷ் ஒரு தயாரிப்பாளராகவும் ‘பென்ஸ்’ படம் மூலம் களமிறங்கினார். இதனைத்தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும் லோகேஷ் அறிமுகமாகவுள்ளார்.
‘அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பக்காவான கேங்ஸ்டர் படமாக தயாராகிறது. அதில் ஹீரோவாக அறிமுகமாகிறேன்’ என லோகேஷ் தெரிவித்தார்.
வழக்கமாகவே லோகேஷ் தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டே இருப்பார். ரசிகர்களோ, படத்தில் ஹீரோவை விட லோகேஷ் அதிகமான கெட்டப்பை போட்டு வருகின்றார் என கமெண்ட்ஸ் விட்டனர். அந்த அளவிற்கு தன் கெட்டப்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும் லோகேஷ் தற்போது தாடியுடன் கூடிய ஒரு கெட்டப்பில் இருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து, தன் கெட்டப் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது பற்றிப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் கெட்டப் பற்றி நினைக்கவே மாட்டேன். தலைகூட சரியாக சீவமாட்டேன். விழாக்களுக்கு செல்லும்போதுகூட கைகளால் தலைமுடியை கோதிக்கொண்டு சென்றுவிடுவேன்.
இந்த கெட்டப் அருண் மாதேஸ்வரன் படத்திற்காக வைத்த கெட்டப். அப்படத்தில் நடிப்பதற்காக தாடியெல்லாம் வளர்த்துக்கொண்டு வருகின்றேன். கூலி ப்ரோமோஷன் நடந்து வருவதால், அருண் மாதேஸ்வரன் எனது தாடியை லைட்டாக ஷேவ் பண்ண அனுமதி கொடுத்துள்ளார். அதனால், தாடி மற்றும் தலைமுடியை லைட்டாக வெட்டி இருக்கின்றேன். மற்றபடி அடிக்கடி கெட்டப் மாற்றுவதற்காக எந்த ஒரு காரணமும் இல்லை’ என்றார்.
ஏற்கனவே ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அதற்கு முன்னதாகவே ‘மாஸ்டர்’ படத்திலும் கேமியோ ரோலில் வருவார். பிறகு ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார் லோகேஷ் கனகராஜ். ரொமான்டிக்கான அந்த ஆல்பம் பாடலில் லோகேஷ் நடிப்பு பாராட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது. மேலும், அஜித் நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும். அப்போது தான் எனது திரைப்பயணம் முழுமை பெறும்’ என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்..!