‘லியோ 2’ உருவாக வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார் திட்டவட்டம்!

லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும், அவரது படங்களின் திரைக்கதை ஆசிரியருமான இயக்குநர் ரத்னகுமார், ‘லியோ 2’ திரைப்படம் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.

லியோ 2 அப்டேட்:

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29’ படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய அவர், “லியோ 2 உருவாக தற்போது வாய்ப்பே இல்லை. ஒருவேளை அத்திட்டம் இருந்தாலும், அது ‘கைதி 2’ படத்திற்குப் பிறகுதான் இருக்கும். ஆனால், இன்னும் ‘கைதி 2’ பணிகளே தொடங்கப்படவில்லை. எனவே, முதலில் ‘லியோ’ படத்தின் அதிகாரப்பூர்வ பின்னணி இசை (OST) வெளியாகட்டும், அதன் பிறகு ‘லியோ 2’ பற்றிப் பேசலாம்” என்று கிண்டலாகத் தெரிவித்தார்.

லோகேஷ் – அல்லு அர்ஜுன் கூட்டணி:

மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் இணையும் புதிய படத்திற்கான திரைக்கதை பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் ரத்னகுமார் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ‘லியோ 2’ கனவில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தாலும், லோகேஷின் அடுத்தடுத்த பிரம்மாண்ட திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LeoLeo 2Lokesh KanagarajRathnakumartrishavijay