லால் சலாம் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருந்தது
இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், கபில் தேவ், விக்னேஷ், ஜீவிதா, கே.எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரிப்பிலும்,ஏ ஆர் ரகுமான் இசையிலும் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் வருகிற ஜூன் மாதம் ஏழாம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.