கருப்பு படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் ஒருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
- Advertisement -
அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சுவாசிகா, யோகி பாபு,நட்டி நடராஜ்,சுப்ரீத் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் டீசர் குறித்து பேசி உள்ளார்.
அதாவது இந்த படத்தின் டீசர் சூரியாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் கருப்பு ஒரு சிறந்த படம் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று சொல்லி இருக்கிறார்.
இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.