சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த பட ஹீரோ..

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் பக்கா கம்ரஷியலி்ல் உருவாகி வருகிறது. இப்படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில் ஓர் இயக்குனராக அவரின் அடுத்த படம் குறித்து கோலிவுட் வட்டாரம் தெரிவித்த தகவல்கள் காண்போம்..

அதாவது ‘கருப்பு’ திரைப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே பாலாஜி ‘குட் நைட்’ பட புகழ் மணிகண்டனை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார். சமீபத்தில் மணிகண்டன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி சந்தித்து கதை பற்றி பேசினர்.

‘கருப்பு’ படத்திற்கு பிறகு உடனடியாக இந்த கூட்டணி இணைய இருப்பதாகவும்
ஆர்.ஜே பாலாஜி -மணிகண்டன் டீம் பற்றி பலரும் பல கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில், அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியாவதால், அப்போதும் கருப்பு திரைப்படம் வெளியாகாது என்றே தெரிகின்றது. அடுத்ததாக தமிழ் புத்தாண்டு தினத்தில் இப்படம் வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

karuppu movie director rj balaji next movie hero update
actor manikandanactor suriyakaruppu movieஆர்.ஜே பாலாஜிவிஜய்