‘கான் சிட்டி’ டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஃநெட்ப்ளிக்ஸ்

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. அதற்குச் சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே கிடைத்த இந்த ஒப்பந்தம், படத்தின் மீதான ஹைப் மேலும் உயர்த்தியுள்ளது.

புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி”, ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அவர்களிடம் கிடைக்கும் பணம் அச்சிடும் இயந்திரத்தைச் சுற்றி கதை நகர்கிறது. பட்டன் அழுத்தினாலே பணம் கொட்டும் என்ற வித்தியாசமான கற்பனை, நகைச்சுவை, உணர்வு, பரபரப்பு ஆகியவற்றுடன் இணைந்து படத்திற்கு தனித்துவமான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். அவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புதிய கூட்டணி மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் இப்படத்தின் பலமாக பார்க்கப்படுகின்றன.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை போன்ற நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் அழுத்தத்தையும், அதற்குள் இருக்கும் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்த ஒரு சுவாரஸ்யமான முயற்சியாக படம் உருவாகியுள்ளது.

மேலும், தனித்துவமான இசைக்காக பெயர் பெற்ற ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக உள்ளது. டீசர் வெளியீட்டிலிருந்தே இசை, காட்சியமைப்பு மற்றும் கதையின் மையக்கரு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெட்பிளிக்ஸ் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருப்பது, “கான் சிட்டி” படத்தின் வணிக மதிப்பையும் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே இப்படிப்பட்ட பெரிய ஒப்பந்தம் கிடைப்பது, படத்தின் தரம் மற்றும் வெற்றியில் இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, புதுமையான ஃபேண்டஸி கலந்த கதை, வலுவான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவுடன் “கான் சிட்டி” தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.

AkhilanAnna BenArjun DasKaan City BagsvadivukkarasiYogi Babuகான் சிட்டி