‘காந்தாரா’ படம் குறித்து, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கருத்து..

‘காந்தாரா: சாப்டர்1 படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர்,

‘ரிஷப் ஷெட்டி மீண்டும் உருவாக்கிய மாயாஜாலமான ‘காந்தாரா’வை பார்த்தேன். மங்களூரு மக்களின் நம்பிக்கையையும், அழகையும் முழு மனதுடன் பிரதிபலிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெளியான முதல் நாளில் இருந்தே வரவேற்பை பெற்று வரும் இப்படம் தற்போது வசூலில் 500 கோடியை நெருங்கி வருகிறது.

முதலில் குறைந்த அளவிலான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து ரூ.500 கோடியை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

indian cricketer praises kantara chapter 1
collectioncricketkantara movieகாந்தாரா: சாப்டர்1கே.எல்.ராகுல்