ஹாரர் காமெடி ‘இருள் சூழும் இரவினிலே’

சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘இருள் சூழும் இரவினிலே’. கமர்ஷியல் ஹாரர்-காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை சிவராம் இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

திகில், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் சிவராம் கூறுகையில், “வலுவான திரைக்கதையால் வெற்றி பெற்ற படங்களின் பட்டியலில் ‘இருள் சூழும் இரவினிலே’க்கும் தனி இடம் கிடைக்கும்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் Moviebuff யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் வயலன்ட் வேலு வடிவமைத்துள்ளார். இது அவரது 100-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம். பாலா தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணுவர்தன் இசையமைத்துள்ளார். அருண் சுஷில் மற்றும் அனில் கிருஷ்ணா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘இருள் சூழும் இரவினிலே’, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொழில்நுட்பக் குழு:

நடிகர்கள்: சிவராம், ரேகா ரமேஷ், நைடிலே ஷைவா, நந்தா கோபால், கீதா, அன்னபூர்ணா, அரவிந்த் உள்ளிட்டோர்
இயக்கம்: சிவராம்
தயாரிப்பு: எம். பாலா (சாய் பாபா பிக்சர்ஸ்)
இசை: விஷ்ணுவர்தன்
ஒளிப்பதிவு: அருண் சுஷில், அனில் கிருஷ்ணா
சண்டைக் காட்சிகள்: வயலன்ட் வேலு (100-வது திரைப்படம்)
படத்தொகுப்பு: அரவிந்த் ஜே.பி.
கலை இயக்கம்: சச்சின்
உடை வடிவமைப்பு: குமார்
நடன அமைப்பு: ராஜ் தேவ்
VFX & டிசைன்: பரதிராஜா
PRO: சிவகுமார்
போஸ்ட் புரொடக்ஷன்: சிவானி ஸ்டுடியோஸ்

Horror Comedy Irul Soozhum IravinileIrul Soozhum Iravinile