மேலும் பட்டைய கிளப்புற மாதிரி ‘தல’ படத்துக்கு ஒரு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்..
‘தல’ அஜித்குமாரின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மீண்டும் ஜோடியாகி உள்ளார் திரிஷா.
இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. புஷ்பா 2 படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.
குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்த நிலையில், பின்னர் அவர் விலகியதால், ஜி.வி. பிரகாஷ் குமார் கமிட்டாகி உள்ளார். படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்திற்கு ப்ரீமியர் காட்சியும் திரையிடப்பட உள்ளது. அதாவது ஏப்ரல் 9-ந் தேதியே இப்படத்தின் ப்ரீமியர் காட்சி பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.
இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக அஜித்தின் எவர்கிரீன் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்ய உள்ளார் ஜி.வி. பிரகாஷ். ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தில் இவர் ‘பஞ்சுமிட்டாய் சேல கட்டி’ பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தது பெரியளவில் ஹிட்டான நிலையில், தற்போது ‘தீனா’ படத்தில் இடம்பெற்ற ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா..’ பாடலை ரீமிக்ஸ் செய்ய உள்ளார்.
தீப்பொறியாய் தெறிக்கவிட்ட அந்த மாஸான பாடல், இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப இசையமைக்க உள்ளதால் ‘தல’ ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.