குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஏற்கனவே netflix நிறுவனம் பெற்று உள்ள நிலையில் தற்போது ott யில் ஒளிபரப்பாகும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அஜித்குமார் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதியோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.