இது ஆள்மாறாட்டம், சைபர் குற்றம்: நடிகை ருக்மணி வசந்த் பதிவு

விஜய் சேதுப​தி​ நடித்த ‘ஏஸ்’ படத்தின் மூலம் அறி​முக​மானார் கன்னட நடிகை ருக்​மணி வசந்த். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்​து, ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கிய ‘மத​ராஸி’ படத்​தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி​யாக நடித்திருந்தார்.

பின்​னர் ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தில் அவர் நடித்த ‘கனகவதி’ கதா​பாத்​திரம் பான் இந்தியா அளவில் அவரைக் கொண்டு சென்​றுள்​ளது. இதன் மூலம் நேஷனல் க்ரஷ் எனவும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

இப்படத்தை அடுத்​து, பிர​சாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோ​வாக நடிக்​கும் பான் இந்​தியா படத்​தில் நடித்து வருகிறார். இந்​நிலையில் அவர் தனது எக்ஸ் தளப் பக்​கத்​தில்,
செல்​போன் எண் ஒன்றைக் குறிப்​பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்​டுள்ளார். அதில்,

‘அந்த செல்​போன் எண்ணைப் பயன்படுத்தும் ஒரு​வர், என்​னைப் போல ஆள்​மாறாட்​டம் செய்து பல்வேறு நபர்​களைத் தொடர்பு கொள்​வது எனது கவனத்​துக்கு வந்​துள்​ளது. அது என்னுடைய எண் இல்லை. அதிலிருந்து வரும் அழைப்​பும் செய்தி​களும் போலியானவை. தயவுசெய்து அதற்கு பதிலளிக்​கவோ அவரைத் தொடர்பு கொள்​ளவோ வேண்டாம். இந்த ஆள்மாறாட்​டம் சைபர் குற்​றத்​தின் கீழ் வருகிறது. எந்த விஷயத்​துக்​கும் நேரடியாக என்னை அல்​லது எனது குழுவைத் தொடர்பு கொள்​ளலாம்’ என தெரி​வித்​துள்​ளார்​.

fake phone calls using my name actress rukmini vasanth warns
actor sivakarthikeyanactress rukmini vasanthVijay Sethupathiகாந்தாரா சாப்டர் 1நடிகை ருக்மணி வசந்த்