மம்முட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; ஆவணங்கள் பறிமுதல்..

பிரேமலு, நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘லோகா’ திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் தயாரித்த இப்படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது தெரிந்ததே.

இந்நிலையில், பூடானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்​பாக சென்​னை​யில் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், துல்​கர் சல்​மான் போலி ஆவணங்​கள் மூல​மாக சொகுசு கார்​களை குறைந்த விலைக்கு வாங்​கிய​தாக​ சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு புகார் சென்​றது. இதையடுத்​து, அவரது வீட்டில் சுங்​கத்​துறை அதி​காரி​கள் சமீபத்​தில் சோதனை நடத்​தினர். இதில், பூடான் நாட்டு ராணுவம் பயன்​படுத்திய ‘லேண்ட் ரோவர்’ போன்ற பழைய சொகுசு கார்களை குறைந்த விலைக்கு வாங்​கி, அதை இந்​தி​யா​வில் மறு​ப​திவு செய்​து, வரி ஏய்ப்பு செய்​தது தெரிய வந்​தது.
இந்​நிலை​யில், இந்த விவ​காரத்​தில் சட்ட விரோத பணப் பரிவர்த்​தனை தடுப்பு சட்டத்தின்​கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்​தது.

இதன் தொடர்ச்​சி​யாக, துல்​கர் சல்​மான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். சென்னை ராஜா அண்ணா​மலை புரத்தில் உள்ள துல்​கர் சல்​மான் வீடு, அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கத்​தில் சோதனை நடந்​தது. தமிழகம், கேரளா​வில் ஒரே நேரத்​தில் 17 இடங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த சோதனை​யில், சொகுசு கார்​கள் இறக்குமதி செய்ததற்கான ஆவணங்​கள், வங்கி கணக்கு விவரங்​கள், கார்​கள் விற்​பனை செய்​யப்​பட்​டதற்​கான ஆவணங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​ததாக கூறப்படுகிறது. சோதனை முடிவடைந்த பிறகே, முழு விவரங்கள்​ வெளியாகும்​ என்​று கூறப்​படுகிறது.

enforcement directorate raids dulquer salmaan house
actor dulruer salmaanactor mammoottyinvestigationஅமலாக்கத்துறைதுல்கர் சல்மான்