மம்முட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; ஆவணங்கள் பறிமுதல்..
பிரேமலு, நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘லோகா’ திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் தயாரித்த இப்படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக சென்னையில் துல்கர் சல்மான், அவரது தந்தை மம்முட்டியின் வீடு, அலுவலகம் உட்பட தமிழகம், கேரளாவில் மொத்தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில், துல்கர் சல்மான் […]