நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் சிறிது காலம் ஓய்விற்கு பிறகு மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறார்.
90ஸ்களில் ஃபேவரட் நடிகையாக இருந்தது மட்டுமில்லாமல் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். இன்று பிறந்தநாள் காணும் நடிகை ஜோதிகாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் அவரது சொத்து மதிப்பு சுமார் 330 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.