ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படம் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியானது.
கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ,மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தற்போது இந்த திரைப்படம் ரீ ரீலீஸ் செய்யப்பட்டு மூன்று நாட்கள் முடிந்து இருந்த நிலையில் 1.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.