ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படம்..

பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகையாக வலம் வருகிறார் என்பது தெரிந்ததே.

அந்நிலையில், அவர் ஷங்கரின் மகன் அர்ஜித் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அவ்வகையில், அப்பாவைப் போல இயக்குநராக ஆவார் எதிர்பார்க்கப்பட்டது.

இச்சூழலில், தற்போது அவரை நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்கப்பட்டது. பல முன்னணி இயக்குநர்களும் கதைகள் கூறினார்கள்.

இறுதியாக, அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரின் கதையில் அர்ஜித்தை ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. அக்கதைக்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றி வருகிறார் அர்ஜித்.

ஏற்கெனவே ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மகன் அர்ஜித்தும் ஹீரோவாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அர்ஜித் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

director shankar son arijit to make his debut as a hero
arijitdirector atleedirector shankarஅதிதி ஷங்கர்மதராஸி