திரையுலகில், தனுஷ் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை..

தமிழ் சினிமாவில், பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான ‘ராயன்’ படம் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. தெலுங்கிலும் ‘குபேரா’ படத்தில் நடித்து தனுஷ் சாதனை படைத்தார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் தமிழிலும் வெளியாகி இருந்தாலும், நேரடி தெலுங்கு படமாகும். இப்படத்தில் தன் அசாத்திய நடிப்பு திறனை மேலும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருந்தார் தனுஷ். அப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற போதும் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் ‘குபேரா’ படத்தையும் தனுஷின் நடிப்பையும் கொண்டாடினார்கள். ஒட்டுமொத்தமாக ‘குபேரா’ திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்தது.

இவ்வாறு ராயன், குபேரா மற்றும் சமீபத்தில் வெளியான தேரே இஷக் மெய்ன் ஆகிய படங்களின் மூலம் 150 கோடி வசூலை பெற்றுள்ளது. அதன் மூலம் டப் செய்யாமல் நேரடியாக அந்தந்த மொழிகளில் வெளியிடப்பட்டு 150 கோடி வசூல் பெற்றது.

அவ்வகையில், வேறெந்த நடிகரும் செய்திடாத ஒரு சாதனையை செய்து காட்டியிருக்கின்றார் தனுஷ். இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அவர் நடிப்பு திறனுக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரமாக இந்நிகழ்வு பேசப்படுகின்றது.

dhanush pan india record through his tere ishk mein movie
actor dhanushkubera movietere ishk mein movieசாதனைதனுஷ்