தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பட்டம் கொடுத்து அழைப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான நிகழ்வு என்பது தெரிந்ததே. அவ்வகையில், பல நடிகர்கள் உண்டு எனலாம். இது குறித்து தற்போது வைரலாகும் நிகழ்வு பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளர் தனுஷ். இவரது இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடைசியாக தனுஷின் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பை நிலையில், தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. முன்னதாக, ஓர் இயக்குனராக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் பல கடுமையான விமர்சனங்களை தனுஷ் சந்தித்தார். அதன் காரணமாக, ஓர் இயக்குனராக தான் யார் என நிரூபிக்கும் கட்டத்தில் தனுஷ் இருக்கின்றார்.
அவ்வகையில் அவர் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம்அவருக்கு மிக முக்கியமான ஒரு படமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் பல ஹைலைட்டான சம்பவங்கள் அரங்கேறியிருக்க அதில் ஒரு விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது ‘இட்லி கடை’ படத்தின் விழா நடக்கும் இடத்திற்கு வெளியில், தனுஷ் ரசிகர்கள் கட்அவுட் மற்றும் பேனர் வைத்திருந்தனர். அதில், ஒரு பேனரில் “இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்” என டைட்டில் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த டைட்டிலுடன் கூடிய ஒரு போஸ்டர் இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் இடம்பெற்றிருந்தது. இது எப்படியோ தனுஷ் காதிற்கு சென்றிருக்கிறது.
அதைக் கேள்விப்பட்ட தனுஷ், உடனடியாக “இளைய சூப்பர் ஸ்டார்” டைட்டிலை அகற்றும்படி கூறியிருக்கின்றார். தனுஷின் பேச்சை கேட்டு ரசிகர்கள், “இளைய சூப்பர் ஸ்டார்” என்ற டைட்டிலை அகற்றி இருக்கின்றனர். இதனை பார்த்த பொதுவான ரசிகர்கள் தனுஷை பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் தீவிரமான ரசிகரான தனுஷே, முதலில் இந்த டைட்டிலை விரும்பி இருக்கமாட்டார். ‘தொடரி’ படத்தில் தனுஷிற்கு இளைய சூப்பர் ஸ்டார் என டைட்டில் கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு தனுஷ் அந்த டைட்டிலை எங்கேயும் உபயோகிக்கவில்லை. தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.