தனுஷ்-அருண் விஜய் மோதும் ‘இட்லி கடை’ படத்தின் அப்டேட்ஸ்

‘இட்லி கடை’ திரைப்படம் குறித்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது புதிய தகவல் வெளியிட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்..

பன்முகத்திறமை கொண்ட தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக, அருண் விஜய் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். படத்தில் அவருக்கான போர்ஷனை ஏற்கனவே தனுஷ் எடுத்து முடித்து விட்டார் என்றும், நித்யா மேனன் போர்ஷன் முழுக்க முழுக்க பிளாஷ்பேக் போர்ஷன் எனவும் கூறப்படுகிறது.

இட்லி கடையில் ஆரம்பித்து அருண் விஜய் உடனான பாக்ஸிங் கதையில் படம் பயணிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி வெளியாகும் இந்த திரைப்படம் வெற்றிப் படமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடித்த மில்லர், இயக்கிய படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், தனுஷுக்கு கம்பேக் படமாக குபேரா மற்றும் இட்லி கடை படங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor arun vijayactor dhanushidly kadai movieதனுஷ்நித்யா மேனன்