கூலி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

கூலி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டு உள்ளது.

Coolie Movie Release Date Update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில் , போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது.

அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் கூலி திரைப்படம் வெளியாக உள்ளதாக போஸ்டருடன் படக்குழு அறிவித்து உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aniruthcoolie moviecoolie movie release date updateLokeshKanagarajRajinikanthSathyarajSun Picturesகூலிசத்யராஜ்நாகார்ஜுனாபகத் பாசில்ரஜினிகாந்த்ஸ்ருதிஹாசன்