விஜயை விமர்சனங்கள் தொடர்ந்து வர அவரது நண்பன் ஆதரவாக பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாநாடுகள் முடிந்த கையோடு தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் விஜய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது கூட்டம் நெரிசல் அதிகரித்து 41 பேர் உயி*ழந்துள்ளனர். உயி*ழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி தருவதாக விஜய் அறிவிப்பும் வெளியிட்டு இருந்தார். இருந்தாலும் பல்வேறு தரப்பினர் விஜய்க்கு எதிராக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வரும் விஜய்க்கு நெருங்கிய நண்பரான சஞ்சீவ் ஆதரவாக ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார் அதில் விஜய் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “உன் பேரை சாய்த்த பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.