“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பான்-இந்தியா திரைப்படமான ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் சார்மி கௌர் மற்றும் ஜேபி நாராயண் ராவ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சம்யுக்தா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று படத்தின் உருவாக்க அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசுகையில், இது Puri Connects நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ் திரைப்படம் என்றும், ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை கவரும் என்றும் தெரிவித்தார். விஜய் சேதுபதியின் நடிப்பு, தபு, துனியா விஜய் மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோரின் பங்களிப்பு படத்தின் பலமாக இருக்கும் என அவர் கூறினார்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பின்னணி இசையிலும் பல புதுமைகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறினார்.

நடிகர் விடிவி கணேஷ், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து, படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவித்தார். அதேபோல், விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை வெகுவாக பாராட்டினார்.

நடிகை சம்யுக்தா, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பணியாற்றியது தனித்துவமான அனுபவம் என்றும், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது தனது திரைப்பயணத்தின் மறக்க முடியாத தருணம் என்றும் குறிப்பிட்டார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசுகையில், ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ தனது முதல் நேரடி தமிழ் திரைப்படம் என்றும், ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாசமான விஜய் சேதுபதியை இப்படத்தில் காண்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கதை சொல்லும் திறமை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், இந்த திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

விஜய் சேதுபதியுடன் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், தபு, துனியா விஜய், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ளது.

BrahmajiDuniya Vijay KumarMakkalselvan Vijay SethupathiSamyukthaSlum Dog 33 Temple Road Press Meet Held in ChennaiSlumdog - 33 Temple RoadTabuVtv Ganesh