Browsing tag

Tabu

அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. உண்மை புதைந்தே கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விஜய் சல்காவோங்கர் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை நோக்கி அரசு மீண்டும் மிகுந்த பலத்துடன் வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் இந்திய […]

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தில் தபுவின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. ஆக்‌ஷன் டிராமா ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், படத்தில் சக்திவாய்ந்த அதிகாரியான கௌரி ஹெக்டே கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தபுவின் பிரத்யேக ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியாகியுள்ளது. முன்னதாக அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியான […]

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பான்-இந்தியா திரைப்படமான ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் சார்மி கௌர் மற்றும் ஜேபி நாராயண் ராவ், […]

‘KING 100’: 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் நாகர்ஜுனா – தபு ஜோடி!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான நாகர்ஜுனா, தற்போது தனது திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லான 100-வது திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். தற்காலிகமாக ‘KING 100’ என்று அழைக்கப்படும் இத்திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேஜிக்! இப்படத்தில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாகப் பிரபல நடிகை தபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘நின்னே பெல்லாடுதா’ (Ninne Pelladata) திரைப்படம் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரிக்காக இன்றும் […]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!

கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் […]