Browsing tag

tvk party

தமிழக வெற்றி கழகத்தால் எந்த பாதிப்பும் கிடையாது.. நாங்கதான் ஜெயிப்போம்.. திவ்யா சத்தியராஜ் பேச்சு..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக மாஸ் காட்டி வந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அடுத்த மாதம் விஜய் எலக்ஷனில் களம் காண இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர்களும் அவர்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் DMKவின் ஆதரவாளரான திவ்யா சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது முதலமைச்சருடன் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து கேள்வி..ஆவேசமாக பதில் அளித்த சரத்குமார்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேசமயம் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் எலெக்ஷனில் போட்டியிட உள்ளார். இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் […]

விஜய் மீது எஸ்.வி.சேகர் மறைமுகமாய் தாக்கு..

ரூ.500 கோடி சம்பளம் வாங்கும் விஜய், தன்னுடைய மேனேஜருக்கு கொடுத்த சம்பளம் ரூ.10,000 என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு திரையுலகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விஜய்யின் முன்னாள் மேலாளராக இருந்த இவர் அண்மையில் திமுகவில் இணைந்துகொண்டார். இவர், திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தார். மேலும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக […]

விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆக்கப்பூர்வமான தீர்ப்பை விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சிக்கு ஒதுக்கப்படும் சின்னம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 234 […]

குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ்?

விஜய் நடிப்பில் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஜனவரி 9-ந்தேதி ரிலீஸ் செய்ய அறிவித்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காமல் இருந்ததுடன், மறு ஆய்வு குழுவுக்கு படத்தை பரிந்துரை செய்தது தணிக்கை வாரியம். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். ப்ரொடக்சன்ஸ் நிறுவனம். அந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ந்தேதி வழங்கப்படும் என தனி நீதிபதி பி.டி. ஆஷா […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட கிளைமாக்ஸ் முடிந்ததும் ‘பிரியாவிடை’ சீன்ஸ்?

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் அடுத்த ‘சிங்கிள்’ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல்-சேட்டிலைட் உரிமைகள் பெரிய அளவில் விற்பனையாகி உள்ளன. தற்போது இப்படத்தின் வெளியீடு தொடர்பாக, தமிழக வியாபார உரிமைக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ கிளைமாக்ஸ் காட்சி குறித்து […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

கரூரில் விஜய்யின் அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், விஜய்மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன என்பது தெரிந்ததே. எனவே, இம்மாதம் வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் சிங்கிள் பாடல் தள்ளிப்போனதாக சொல்லப்படுகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ சிங்கிள் வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சூழலில் பாடல் வெளியிடுவது சரியாக இருக்காது என தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தற்போதைக்கு […]

நடிகை ராதிகா பதிவுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி..

ராதிகா சரத்குமார் தன் அப்பா எம்.ஆர். ராதா பட வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். எம்.ஆர். ராதா கேட்ட கேள்வி: #mrradha என்று மட்டும் குறிப்பிட்டு ராதிகா வெளியிட்ட அந்த வீடியோவில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கூறியிருப்பதாவது, நீ இருந்த இருப்பென்ன, வாழ்ந்த வாழ்வென்ன. உன் பங்களா வாசல்ல எத்தனை கூர்கா. இந்த படம் எடுக்கிற எல்லாம் தயாரிப்பாளர் கிட்டயும் பணத்த வாங்கிட்டு கால்சீட் குடுத்திட்டு கொடைக்கானல் சீசனுக்கு போய்டுவியே. நீ வாயை திறந்து என்ன சொல்லுவனு இந்த […]

கரூரில் விஜய் பிரச்சாரம்: ஸ்ருதிஹாசன் மறைமுக விமர்சனம்?

விஜய்யை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளாரா என பார்ப்போம்.. ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டா ஸ்டோரி என ஒரு ஸ்டோரியை பலரும் ஷேர் செய்து அவருக்கு இருக்கும் பொறுப்பை பாராட்டுவதாக தெரிவித்து உள்ளனர். அந்த ஸ்டோரியில் கூறியிருந்ததாவது, ‘ஒரு ஜோக்கர் ஜோக்கராக நடந்து கொண்டதற்காக அவரை குறை சொல்லக் கூடாது. சர்க்கஸுக்கு போனதற்காக உங்களை தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஏதோ பொதுவாக ஸ்டோரி போட மக்களோ அது தவெக விஜய் கரூருக்கு போனதை தான் விளாசியிருக்கிறார் […]

கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம்: விஜய் ஆறுதல்..

கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக […]