விஜய்யை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளாரா என பார்ப்போம்..
ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டா ஸ்டோரி என ஒரு ஸ்டோரியை பலரும் ஷேர் செய்து அவருக்கு இருக்கும் பொறுப்பை பாராட்டுவதாக தெரிவித்து உள்ளனர். அந்த ஸ்டோரியில் கூறியிருந்ததாவது,
‘ஒரு ஜோக்கர் ஜோக்கராக நடந்து கொண்டதற்காக அவரை குறை சொல்லக் கூடாது. சர்க்கஸுக்கு போனதற்காக உங்களை தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர் ஏதோ பொதுவாக ஸ்டோரி போட மக்களோ அது தவெக விஜய் கரூருக்கு போனதை தான் விளாசியிருக்கிறார் என்கிறார்கள் ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள். அந்த ஜோக்கர் விஜய், சர்க்கஸ் தான் கரூரில் நடந்த கூட்டம் என்று வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். இந்நிலையில் அந்த இன்ஸ்டா ஸ்டோரியை நீக்கிவிட்டார் ஸ்ருதி ஹாசன் என்றும் பேசுகிறார்கள்.
ஆண்டவர் மகளுக்கு தைரியத்தை பார்த்தீங்களா?. ஒரேயொரு ஸ்டோரி போட்டு விஜய்யை என்னமா விமர்சித்திருக்கிறார் என வலைத்தளவாசிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஒரு பக்கம் ஸ்ருதி அடிக்கிறார், மறுபக்கம் சித்தி ராதிகா பொளக்கிறார் எனவும் பேசுகிறார்கள்.
இதற்கிடையே கரூரில் 12 மணிக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்ற விஜய் ஏன் இரவு 7 மணிக்கு வந்தார். அவர் 7 மணிநேரம் தாமதமாக வந்ததால் தானே மக்கள் அதிக அளவில் கூடினார்கள். மேலும் 12 மணி என்று சொன்னதால் பலரும் காலையிலேயே அந்த இடத்திற்கு வந்துவிட்டார்கள். பசி, தாகத்தில் தவித்தார்கள். விஜய், தான் தாதமாக வந்ததற்கான காரணத்தை சொல்லியே ஆக வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
மக்கள் சேவை செய்ய கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே நடிப்பை விட்டுவிட்டு வருவதாக தொடர்ந்து கூறி வரும் விஜய், அதே மக்களுக்காக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பிரச்சாரம் செய்தால் பலருக்கும் நல்லது என்று விமர்சிக்கப்படுகிறது. அதையெல்லாம் பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
இதற்கிடையே கரூர் சோகத்தை வைத்து விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆகியோரை கலாய்த்து இன்னும் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலரோ விஜய் நடித்த காட்சிகளை வைத்தே மீம்ஸ் வீடியோ உருவாக்கி இருக்கிறார்கள்.