நேருக்கு நேர் மோதல்?: அஜித்தின் ‘விடாமுயற்சி’ தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்..’

அஜித்-தனுஷ் திரைப்படங்கள் வரும் பிப்ரவரியில் ரிலீஸாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..

‘பிரேக்டவுன்’ என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம், ரீமேக் உரிமையை வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பொங்கல் ரிலீஸில் இருந்து விலகியது.

இதையடுத்து, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லரில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த படத்தில், ரெஜினா கசண்ரா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன்மூலம் தனுஷ் படத்துக்கு போட்டியாக அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் உறுதியாகி உள்ளது. தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 7-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், பவிஷ் என இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது, தனுஷ் இயக்கும் 3-வது திரைப்படமாகும்.

இதேபோல் தனுஷ் இயக்கிய மற்றொரு படமான இட்லி கடை படத்துக்கு போட்டியாக ஏப்ரல் 10-ந் தேதி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. சபாஷ்.. சரியான போட்டி தான்!

ajith in vidaamuyarchi clash with dhanush directional movie

 

 

actor ajith kumaractor dhanushVidaaMuyarchi Movieஇட்லி கடைதிரிஷா