தொடர்ந்து கார் விபத்தில் சிக்கியுள்ளார் அஜித் குமார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. இதுவரை உலக அளவில் 218 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
படம் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் தற்போது கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்று இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் ஐரோப்பியன் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கான பயிற்சியின் ஈடுபட்டபோது எதிர்ப்பாராத விதமாக அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது.
ஆனால் தற்போது அஜித் பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் நலமாகவே இருக்கிறாராம். இருப்பினும் இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.